இந்திய கலாச்சாரத்துடன் தொடர்புடைய கஞ்சாவை போதைப்பொருளாகாரக் கருதாமல் அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகரும், தயாரி்ப்பாளருமான உதய் சோப்ரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக உயத் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது விருப்பம்.கஞ்சா நமது கலாச்சாரத்துடன் தொடர்புடையது, ஒரு பகுதியாகும். இதை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தால், அரசுக்கு வரி மூலம் நன்கு வருவாய் கிடைக்கும். அரசே விற்பனை செய்வதன் மூலம் இந்த தொழிலில் சட்டவிரோதமாக ஈடுபட்டுள்ளவர்களும் நிறுத்திவிடுவார்கள். மருத்துவரீதியாகவும் கஞ்சா பலன் தரக்கூடியது என்று தெரிவித்தார். 

நடிகர் உதய் சோப்ராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகின. இதையடுத்து, நடிகர் உதய் சோப்ராவுக்கு மும்பை போலீஸார் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டனர். அதில், உதய் சார் இந்திய குடிமகனாக உங்கள் கருத்தை பொது இடத்தில் தெரிவிக்க உரிமை இருக்கிறது. ஆனால், இப்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, கஞ்சாவை வைத்திருப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம் எனத் தெரிவித்தனர்.