பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று, நடிகர் கமல்ஹாசன் வருவதால்... ரசிகர்கள் மிகவும் உட்சாகமாக மாறிவிட்டனர். அதே போல் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இன்றைய தினம் வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், ரசிகர்கள் மத்தியில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் கமல், பிரெண்ட்ஷிப்பில் மூன்று வகை இருக்கிறது. பிரெண்ட்ஸ் , கிளோஸ் ப்ரெண்ட்ஸ் மற்றும் நம்மளையே கிளோஸ் பண்ணுற ப்ரெண்ட்ஸ் என கூறுகிறார்.

இதை தொடர்ந்து பேசும் கமல் இந்த மூன்றுமே, பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல் தான் தோன்றுகிறது. ஆனால் எனக்கு ஒரு கேள்வி.  என கூறி... கடந்த வாரம் முகேன், அபிராமி மீது கோவப்பட்டு தன்னுடைய கைகளை வேகமாக 'கட்டிலில்' குத்தி உடைத்த காட்சி காட்டப்படுகிறது.
இது பிரெண்ட்ஷிப்பா...? உங்களுக்கும் இந்த கேள்வி இருக்கும் என நினைக்கிறேன்... கேட்டு விடலாம் என கூறுகிறார்.

இதில் இருந்து இத்தனை நாள், அபிராமி - முகேன் பழகி வந்தது குறித்து பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்த கமல், இன்று இவர்கள் இடையே உள்ளது உண்மையில் நட்பா... அல்லது காதலா என அவருடைய வாயாலேயே பதிலை கூற வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.