பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் பேராதரவோடு அதிக ஓட்டுகளை பெற்று டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர், மலேசிய பாப் பாடகர் முகேன். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் பேராதரவோடு அதிக ஓட்டுகளை பெற்று டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர், மலேசிய பாப் பாடகர் முகேன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆரம்பத்தில் இருந்து நடுநிலையாக விளையாடி வந்த இவர், பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வெற்றி பெற்றார். இவரை இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய அபிராமி, துரத்தி துரத்தி காதலித்த போதிலும், வெளியில் இருக்கும் தன்னுடைய காதலி ஸ்பார்க்கிலுக்கு உண்மையாக இருந்தது இவரை வெற்றியாளராக மாற்றியது எனலாம்.

ஆனால், இவருடைய காதலி ஸ்பார்க்கில் (நதியா)வை யாரும் பார்த்தது இல்லை. மேலும் இவரை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் அனைவருக்கும் உண்டு. எனினும் இதுவரை ஸ்பார்க்கில் இவர் தான் என பல புகைப்படங்கள் உலவியது. அதற்கு முகேன், தன்னுடைய நண்பர்களுடன் தான் எடுத்து கொண்ட போட்டோவை வைத்து தன்னுடைய காதலி என கூற வேண்டும் என தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தார்.

இந்நிலையில் முகேன் காதலி ஸ்பார்கில் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்த முகேன், முதல் முறையாக தன்னுடைய காதலி யார் என்பதை, பிறந்தநாள் புகைப்படத்தை வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தில் முகேன், ஸ்பார்கில் இருவரும் இடம்பெற்றுள்ளனர். இப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.