ஓரு ஏழைத்தாயின் மகனான டீ மாஸ்டர் இந்த பரந்த தேசத்தின் பிரதமராகலாம் என்று மோடி நிரூபித்தது போல், சாதாரண ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் முயற்சித்தால் மாஸ் ஹீரோவகலாம் என்று நிரூபித்தவர் சிவகார்த்திகேயன். 

தொடர் ஹிட்டுகளின் மூலம் சிவகார்த்திகேயனின் கிராஃப் உச்சம் பெற்றதும், டான்ஸ்! காமெடி! ஆக்‌ஷன்! பக்கத்து வீட்டு ஸ்மார்ட் பாய் லுக்! என்று அத்தனை சிறப்புகளையும் பெற்றிருக்கும் இவரது வருகையால், விஜய் வரைக்கும் வியாபார சிக்கல்கள் உருவானதும் ஊரறிந்த உண்மை.  கொட்டிய கோடிகளால் சிவகார்த்தி தாறுமாறாக செட்டிலானது மட்டுமில்லாமல் தனது நண்பர் குலாமை கைதூக்கி விடுவதற்காக படத்தயாரிப்பு செய்யுமளவுக்கு முன்னேறிவிட்டார் வாழ்க்கையில். 

அவர் தயாரித்த கனாவுக்கு பெரிய வரவேற்பு. ஆனால் சிவகார்த்தியின் கடைசி மூன்று படங்கள் பெரிதாய் ஓடவே இல்லை. அதிலும் சீமராஜா மரணமாஸ் சொதப்பல். இதனால் அவருக்கு மார்க்கெட் டல்லடிக்கவில்லை என்றாலும் பாக்கெட் பயங்கரமாக டல்லடித்துக் கொண்டிருக்கிறது. இதில் எஸ்.கே. செம்ம அப்செட். போதாக்குறைக்கு, அவரது படங்கள் ரிலீஸாகும் வேளைகளிலெல்லாம் தலைதூக்கும் பண பிரச்னைகள் தாறுமாறாக போய்க் கொண்டிருக்கின்றன. 

ரெமோவில் ஆரம்பித்த சிக்கல் இதோ சீமராஜா தாண்டி நீண்டு கொண்டே இருக்கிறது. பொதுவாக தயாரிப்பாளர்களுக்குதான் பணச்சிக்கல் வரும், சிவகார்த்திக்கு ஏன்? என்று கேட்கலாம். நண்பர்தான் தயாரிப்பாளர் என்பதாலும் தனது வளர்ச்சியை கெடுக்க குறி வைக்கும் கூட்டம், தன் நண்பரை சாய்ப்பதை தடுக்க இவர் உள்ளே நுழைவதாலும் வரும் சிக்கல் இது. 

சிவகார்த்தி கிட்டத்தட்ட நாற்பது கோடி ரூபாய்க்கு ஜாமீன் கையெழுத்து போட்ட பிறகுதான் சீமராஜா படம் ரிலீஸாக முடிந்தது. அந்தளவுக்கு அந்தப் படத்திற்கு ஃபைனான்ஸ் சிக்கல்கள். ஆனால் படம், பப்படமாகிவிட்டது. 

இந்நிலையில் சிவகார்த்தியின் அடுத்த படமான ‘மிஸ்டர் லோக்கல்’ மே மாதம் திரைக்கு வருகிறது. இந்தப்படம் வெற்றிபெற்று, தன்னை சுற்றி இருக்கும் இம்சை மேகங்கள் விலகும் என அவர் நினைத்தார். ஆனால் மீண்டும் அவரது காலை சுற்ற ஆரம்பிக்கிறது ஃபைனான்ஸ் பாம்பு. சீமராஜா பணப்பாக்கியை செட்டில் செய்தால்தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம்! என்று அதற்கு ஃபைனான்ஸ் கொடுத்தவர்கள் சிவாவின் கழுத்தில் கத்தி வைத்துவிட்டனர். 

எப்படியும் பத்துப், பதினைந்து கோடியாவது தன் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்தால்தான் மிஸ்டர் லோக்கல் திரையிலிறங்கும் என்பது உறுதியாகிவிட்டது. சொந்தப் பணம் இப்படி லம்பாக கரைவதில் சிவாவின் குடும்பமே அழுது கண்ணீர்வடித்துக் கிடக்கிறதாம் பாவம். ஆனால் இந்த வளர்ச்சிக்கு ஒரே காரணம் சிவாதான் என்பதால் வீழ்ச்சிக்காக அவரை திட்ட முடியாமல் இருக்கிறார்கள்.

 இந்நிலையில், தன் புதுப்படம் ரிலீஸாகையிலெல்லாம் இப்படி சிலர் ஃபைனான்ஸ் பஞ்சாயத்து செய்வது ஏன்? என்று இன்டஸ்ட்ரிக்குள் ஒரு விசாரணை டீமை இறக்கி விட்ட சிவாவுக்கு கிடைத்த தகவல் ஆர்.டி.எக்ஸ். ரகம். ஆம் எல்லாம் நடப்பது நயன் தாராவுக்காகதானாம்! அதாவது நயன் ஒரு காலத்தில் ஒரு இளம் நடிகருக்கும் செம்ம தோஸ்தாக இருந்தார். இருவரும் இணைந்து நடித்தது ஒரே படம்தான் ஆனாலும் அது மாஸ் ஹிட்.  ஒரு படப் பிரச்னையில் நயனுக்கும், அந்த ஹீரோவுக்கும் நட்பு அத்துக் கொண்டது. விளைவு, அதன் பிறகு அவர் கூட ஜோடி போட மறுத்துவிட்டார் நயன். 

அந்த நபர் துவக்கத்தில் சிவகார்த்திக்கு ஆபத்பாந்தவனாக இருந்து பிறகு பரம வைரியானவர். தன்னை மதிக்காத நயன் தாரா இப்படி சிவகார்த்தியோடு வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் என்று ஜோடி போட்டு நடிப்பதை அவரால் சகிக்க முடியவில்லையாம். அவரால் நயனை திட்டவோ, தடுக்கவோ முடியாது. காரணம் அவர் போல்டு லேடி. அதனால் சிவகார்த்தியை ஃபைனான்ஸ் ரீதியில் முடக்க துடிக்கிறாராம். சிவாவின் படத்துக்கு ஃபைனான்ஸ் செய்துள்ள நபர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இந்த இம்சைகளை அரங்கேற்றுகிறார்! என்கிறார்கள். 

மாப்பிள்ளைன்னாலே முறுக்குதான், அதிலேயும் பெரிய வீட்டு மாப்பிள்ளைன்னா கேட்கவா வேணும்?