புருடா விடுவது சரியில்ல... இப்படி உடான்ஸ் விடலாமா? வடிவேலுவை வளைச்சு வளைச்சு வெச்சு செஞ்ச பிரபல இயக்குனர்...

24ஆம்புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், சிம்புதேவன் சாரின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன் என வடிவேலுவை காச்சி எடுத்துள்ளார் பிரபல இயக்குனர் நவீன்.

Moodarkoodam naveen troll vadivelu

24ஆம்புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், சிம்புதேவன் சாரின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன் என வடிவேலுவை காச்சி எடுத்துள்ளார் பிரபல இயக்குனர் நவீன்.

ப்ரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்த நேசமணி கதாபாத்திரம் சமீபத்தில் உலக அரங்கில் டிரெண்ட் ஆனது. இதைத்தொடர்ந்து வடிவேலு முன்னணி இணையதளத்துக்கு பேட்டி அளித்திருந்தார். ப்ரண்ட்ஸ் படம் குறித்தும், அதில் நேசமணி கதாபாத்திரம் உருவான விதம் குறித்தும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் வடிவேலு நடிப்பில் புதிய படங்கள் வெளிவராததற்கான காரணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த வடிவேலு, இயக்குநர் சிம்புதேவனை டைரக்டர் பையன்,  சின்ன பையன், சின்ன டைரக்டர், பெருசா வேலை தெரியாத டைரக்டர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன் காரணமாக வடிவேலுவுக்கு, தமிழ்த் திரையுலகில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து   இயக்குநர் சிம்புதேவனிடம் உதவியாளராகப் பணியாற்றி, பின்னர் மூடர் கூடம் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான நவீன் வடிவேலு அளித்த இந்தப் பேட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். #NesamaniInComa மற்றும் #NesamaniStayInComa ஆகிய ஹேஷ்டேக்குகளில் அவர் தனது ட்விட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்.

Moodarkoodam naveen troll vadivelu

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் சிம்புதேவன் சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது.

உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனுக்கு சாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

புலிகேசி intervel sceneல VSRagavan 'திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது’ என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டைலாக் வந்துச்சுனா படம் flop என்றீர்கள். என் இயக்குனர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார்.

23ஆம்புலிகேசி நான் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பை பார்த்து வியந்ததை போல என் இயக்குனரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நிங்கள் புருடா விடுவது போல் அவர் எடுப்பார் கைபிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குனர்.

வடிவேலு எனும் மகா கலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையை பொருத்தும் கொள்வேன். ஆனால் என் இயக்குனர் சிம்புதேவன் சார்  மற்றும் நான் பெரிதாக மதிக்கும், இயக்குனர் ஷங்கர் சாரை பற்றி மரியாதை குறைவாக பேசுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது. 

Moodarkoodam naveen troll vadivelu

புலிகேசி படப்பிடிப்பிற்கு முன்பே அதன் bound script படித்து புல்லறித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரக்‌ஷன் சொன்னால் மரியாதைக்காக சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குனர். ஆனால் கதையை மாற்றியதில்லை.

24ஆம்புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், சிம்புதேவன் சாரின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன்.

நான் ஷங்கர் சார் தயாரிப்பில் 2 படங்கள் வேலை செய்துள்ளேன். இயக்குனர் சுதந்திரத்தில் தலையிடாத தயாரிப்பாளர். director final edit முடித்த பிறகே படத்தை பார்ப்பார். 24ஆம்புலிகேசியில் வடிவேலு அண்ணன் தலையீட்டை எதிர்த்து இயக்குனர் பக்கம் நின்றவர் அவர்.

Moodarkoodam naveen troll vadivelu

தங்கள் புரிதல் தவறு தோழர். நடிகனின் வேலை ஸ்கிரிப்டில் கரக்‌ஷன் சொல்வது அல்ல. ஸ்கிரிப்டை தன் நடிப்பின் மூலம் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்வது. Cinema is a teamwork. யாரும் சஜஷன் சொல்லலாம். ஆனால் இயக்குனரின் முடிவே இறுதியானது. அதை மதிக்க வேண்டும் என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios