சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள திரைப்படம் ‘96′. பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்துக்கு பல தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள திரைப்படம் ‘96′. பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்துக்கு பல தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பலர் தங்களுடைய பழைய காதல் நினைவுகள் மீண்டும் இந்த திரைப்படம் நினைவு படுத்தியதாக கூறி இருந்தனர்.

படத்தில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இதேபோல் இவர்களின் பள்ளிப்பருவகால கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கெளரி நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, த்ரிஷா ஜோடிக்கு இணையாக இவர்களின் ஜோடியும் பலராலும் பாராட்டப்படுகிறது.

படத்தின் எந்தவொரு இடத்திலும் த்ரிஷா ஆபாச உடையில் வரமாட்டார். படம் முழுக்க சுடிதாரும் அதற்கேற்ப துப்பட்டாவையும் மடித்து போட்டிருப்பார். இதுவே படத்தின் காதலை தூக்கிக் காட்டியது. இதனால் த்ரிஷா அணிந்திருந்த உடைகளும் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் ‘96’ படத்தில் த்ரிஷா அணிந்திருந்ததை போன்ற உடைகளும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இந்த உடைகள் தற்போது பேஷன் ஆகிவிட்ட நிலையில் ட்விட்டரில் இந்த உடையை த்ரிஷா ரசிகர்கள் தெறிக்க விட்டிருக்கின்றனர். #jannudress போன்ற ஹேஷ்டேக்கையும் இதற்காக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஜானு ட்ரெஸ்ஸை... மோனலிசா போட்டுள்ளது போல் ஒரு புகைப்படத்தை நடிகை த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்து பல ரசிகர்கள் இந்த வேலையா யாருப்பா பார்ததுனு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த புகைப்படம் இதோ:
