Mohanlal started the war against Mahabharata

நடிகர் மோகன்லால் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் நடிப்பில் விரைவில் துவங்கவுள்ள மகாபாரதம் படத்திற்கு எதிராக கேரள இந்து ஐக்கிய வேதி என்ற இந்து அமைப்பு போரைத் தொடங்கியுள்ளது.

எம்.டி.வாசுதேவனின் பிரபல நாவல் “இரண்டாமூழம்” என்ற நாவலின் தழுவல் தான் இந்த படம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், படத்திற்க்கு மகாபாரதம் என பெயரிடப்பட்டுள்ளதற்கு, கேரளாவில் உள்ள ஒரு பிரபல இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வியாசர் எழுதிய உண்மையான மஹாபாரத கதையை படமாக்கினால் மட்டுமே அந்த பெயரை பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

அதையும் மீறி மோகன்லாலின் இரண்டாமூழம் "மகாபாரதம்" என்ற பெயரில் வந்தால், அதை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளது கேரள இந்து ஐக்கிய வேதி என்று இந்து அமைப்பு…