ஆமா நைனா, சித்தப்பு உன்ன கலாய்ச்சதுக்கு ஏன் நீ சாக்‌ஷியை கட்டிப்பிடிக்கிற? ஒன்னு அழுதுக்குனே பொண்ணுங்கள கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கறது, இல்ல அழற பொண்ணுங்கள ஆறுதல் சொல்றதா கேப்புல புகுந்து கட்டிப்புடிச்சி முத்தம் கொடுக்கறது என மோகன் வைத்தியா பண்ணும் அந்தரங்க குசும்ப சாண்டி ஸ்டைலில் கேட்கத்தோன்றுகிறது பார்வையாளர்களுக்கு. 

மோகன் வைத்யா – சரவணன் பஞ்சாயத்து பொறுத்தவரை பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து சரவணன் வைத்தியாவை அவரது மேனரிஷம் வைத்து சரவணன் கிண்டலடிப்பதாக, வீட்டின் மற்ற நபர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய எவிக்‌ஷனிலும் அது பிரதிபலித்துள்ளது.

அதிலும் ஒட்டு மொத்தமாக வைத்தியாவிற்க்கு சாதகமாக, சித்தப்புக்கு எதிராக நின்றது சற்று ஷாக்கை கொடுத்துள்ளது என்றாலும், பொதுவாகவே சரவணன் மற்ற ஹவுஸ் மேசை கலாய்ப்பதை வாடிக்கையாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது தான், இதற்கிடையில் சரவணன் மட்டும் அல்ல, அவ்வபோது சாண்டி, கவின் அடிக்கடி வித்வான் மோகன் வைத்தியாவை வெச்சு கலாய்த்து வருவது வழக்கம் தான் என்றாலும், கிடைக்கும் கேப்பில் அந்த டீமின் லீடர் சித்தப்பு சரவணனும் சைலண்ட்டாக குசும்பு பண்ணுவது மட்டும்   பெரும் சர்ச்சையை கிளப்புகிறது.

இந்த நிலையில், வைத்தியாவை நேற்றைய நிகழ்ச்சியில் சரவணன் நேரடியாக சரவணன் வைச்சி செய்ய கடுப்பான வைத்தியா வழக்கம் போல சாக்‌ஷியை இருக்கி அணைத்த படி அழுது புழம்பிய சம்பவம் சிரிப்பைதான் வரவழைத்துள்ளது. வீட்டில் அடுத்த சினேகன் இல்லாத குறையை மோகன் வைத்தியாவை என நெட்டிசன்கள் சமூக இணையதளங்களில் வாட்டி வதக்கி எடுத்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் சொன்னவுடனே உணர்ச்சி வசப்பட்ட மோகன் வைத்யா, சக பெண் போட்டியாளர்களை இறுக்கி கட்டிப்பிடித்து கன்னா பின்னா வென முத்தம் முத்தம் கொடுத்தார். தேம்பித் தேம்பி கலங்கியபடியே பெண்கள் பக்கம் மட்டுமே சென்று ஒவ்வொருவராக இறுக்கி அணைத்து கன்னத்திலும் நெற்றியிலும் முத்தம் கொடுத்தார். 

கடைசியாக லாசலியாவுக்கு முத்தம் கொடுத்த சமயத்தில் கடுப்பான கமல் முத்தம் கொடுத்தது போதும் இதுக்கு மேல வேணாம் என்று நோஸ் கட் செய்தார். வந்த நாளிலிருந்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அழுவுவது இல்ல அழும் பெண்களை கட்டி அனைத்து தடவிக்கொடுத்து முத்தம் கொடுப்பது போன்ற அநாகரிக அந்தரங்க சில்மிஷ வேலைகளை செய்து வருவதாக பிக்பாஸ் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.