பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் ஒருவரான மோகன் வைத்யா தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். முதல் இரண்டு வாரங்களில் பார்ப்பதற்கு மிகவும் சாந்தமாகவும், வயதில் பெரியவர் என்பதற்கு ஏற்ப மற்ற போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறியும் அவ்வப்போது சில பல கசப்பான நிகழ்வுகளை சக போட்டியாளர்களிடமும் பகிர்ந்து வந்திருந்தார். 

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. காரணம் எதற்கெடுத்தாலும் மோகன் வைத்யா அழுவதும் கோபித்துக்கொள்வதும், அவ்வாறு சோகமாக இருக்கும்போது அருகில் இருப்பவர்களை கட்டி பிடித்துக் கொள்வதும்..அதில் குறிப்பாக சாக்ஷி அபிராமி என சொல்லிக் கொண்டே போகலாம்.

இதற்கு உதாரணமாக... இரண்டாம் வார இறுதியில் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே மோகன் வைத்யா பெயர் காண்பிக்கப்பட்டபோது, அவர் உணர்ச்சிவசப்பட்டு வெளியே செல்ல போகிறோம் என எண்ணி அனைவரையும் ஒவ்வொருவராக கட்டிப்பிடித்து அழுதார். பின்னர் சேரன், சாண்டி,சாக்ஷி என அனைவரையும் கட்டிப்பிடித்து  பின்னர் லாஸ்லியா விடம் சென்று, கன்னத்தை பிடித்து நெற்றியில் முத்தமிடுகிறார். அப்போது கமல் கூட.."போதும் போதும் ரொம்ப முத்தம் கொடுத்துட்டு" என சொல்லியிருந்தார். 

இவ்வாறாக பிக்பாஸ் வீட்டில் செல்கிறது இந்த பல்வேறு முத்தக்காட்சி. பிக்பாஸ் சீசன் ஒன்றில் சினேகன் பற்றி கட்டிப்பிடி வைத்தியம் பேசப்பட்டது. ஆனால் அதனை எல்லாம் ஓரங்கட்டி விட்டு ஸ்நேகனை மிஞ்சி உள்ளார் மோகன் வைத்யா