பிரபல நடிகை சாலையில் பலூன்  விற்பனைசெய்துகொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கொஞ்சியபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .   அரசியல்வாதியாக இருந்து நடிகையானவர் நுஸ்ரத் ஜஹான் ,  இவர் தன் வார இறுதியில் தனது காரில் ஹாயாக சுற்றி வந்த போது ,  சாலையில் பலூன் விட்டுக்கொண்டிருந்த சிறுவனை தூக்கி கொஞ்சி உள்ளார் . 

அதற்கான புகைப்படங்களை திரிணாமுல்  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான நுஸ்ரத் ஜஹான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ,  அவருக்கு இணையதள வாசிகள் மிகுந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் பதிவு செய்து வருகின்றனர் . இப் புகைப்படங்கள் பலரின் மனதில் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர் .  இந்த புகைப்படத்தில்  நுஸ்ரத் ஜஹான்  ஒன்றரை வயது சிறுவனை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார் . இந்த  புகைப்படங்களுக்கு  இன்ஸ்டாகிராமில் இதுவரை  சுமார் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் கொடுத்துள்ளனர் . அப் புகைப்படத்தில்  தனது வார இறுதி நாட்களை சிறப்பாக ஆக்கிய நபர் என அச்சிறுவனை குறிப்பிட்டு  அவர் அப்புகைப்படங்களின் கீழ்  கமெண்ட் செய்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது . 

அதாவது அந்த புகைப்படத்தில் குழந்தை ஒன்றை மடியில் வைத்து கொஞ்சியபடி உள்ளார் நுஸ்ரத் ஜஹான்.  அவரது மடியில் உள்ள இந்த குழந்தை சாலையில் பலூன்விற்றுக் கொண்டிருந்ததாகவும் அவன் விற்ற பலூன்களை விட அவன் வண்ணமயமாக உள்ளதாகவும் நடிகை நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார் .  வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை காண்போர் அனைவரும் நுஸ்ரத் ஜஹானை மனம் திறந்து பாராட்டி வருகின்றனர் .