திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் "மிஸ் இந்தியா'..!

திருநங்கைகளுக்கே முக்கியத்துவம்..!

மிஸ் இந்தியா 2018 இல் வெற்றி பெற்ற அனுக்ருதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவருடைய படிப்பு, அவருக்கு வாழ்த்து தெரிவித்த நல்உள்ளங்கள், மிஸ் வேர்ல்ட் குறித்த கருத்துக்கள் என அனைத்திற்கும் பதில் அளித்தார்.

அப்போது, இந்த சமூகத்திற்கு அவர் என்ன செய்ய விருப்பப் படுகிறார் என்ற கேள்விக்கு....

திருநங்கைகளுக்கு தனி மரியாதை வேண்டும்..இந்த சமூகத்தில் அவர்கள் மூன்றாம் பாலினமாக ஏற்று மரியாதை கொடுக்க வேண்டும்..அவர்களுக்கென தனி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்..

அதற்காக அவருடைய முயற்சி பெருமளவு இருக்கும் என தெரிவித்து இருந்தார்...இதற்காக "நான் உலகத்தையே மாற்ற போகிறேன் என தெரிவிக்க வில்லை..அதே சமயத்தில் திருநங்கைகள் மீதான கண்ணோட்டம் சற்று மாற வேண்டும் என  அவர் தெரிவித்து இருந்தார்.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும், திருநங்கைகள் மீதான ஒரு கண்ணோட்டம் இன்னும் மாறவில்லை..எனவே  இதற்காக நான் பாடுபடுவேன் என தெரிவித்து உள்ளார்

திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க பாடுபடுவேன் என இன்று தெரிவித்த அதே நாளில் நாளில் தான் திருநங்கை ஒருவர்  வழக்கறிஞராக இன்று உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.