உலக அளவில் ராப் பாடல்கள் மூலம் புகழின் உச்சத்தை தொட்டவர் மைகேல் ஜாக்சன். இந்நிலையில் இவரின் தந்தை ஜோ ஜாக்சன் நேற்று மரணமடைதுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மைகேல் ஜாக்சன்:

உலகப்புகழ் பெற்ற ஆபிரிக்க, அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர்,இசையமைப்பாளர், நடிகர் உள்ளிட்ட பல்வேறு திறமைகளோடு திகழ்ந்தவர் மைல்கல் ஜாக்சன். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரின் மரணம் உலக ரசிகர்கள் அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியது.

தந்தை ஜோ:

தற்போது மைகேல் ஜாக்சனின் தந்தை ஜோ புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார். 86 வயதாகும் ஜோ ஜாக்சன், கடந்த சில வருடங்களாகவே புற்று நோய் ஏற்பட்டு அதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வந்தார். 

இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் மரணமடைந்தார். இதனால் மைகேல் ஜாக்சன் குடும்பத்தினர் மீள முடியாத துயரத்தில் உள்ளனர்.

ஏற்கனவே பல முறை மாரடைப்பு ஏற்பட்டு, காப்பாற்ற பட்டவர் ஜோ ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

மைகேல் ஜாக்சன் வலது கை:

ஜோ ஜாக்சனின் 7 வது மகனாக பிறந்த மைகேல் ஜாக்சனுக்கு, இவர் தந்தை என்பதையும் தாண்டி கடைசி வரை அவருக்கு வலது கை போல் உறுதுணையாக இருந்தவர். மேலும் மைகேல் ஜாக்சன் மேனேஜர் என்கிற பொருப்பினும் இருந்தார்.

இவரின் மரணம் குறித்து அறிந்த பிரபலங்கள் பலர், தொடர்ந்து மைகேல் ஜாக்சன் குடும்பத்திற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.