இவ்விருவரின் கூட்டணியில் உருவாகிவரும் படம்தான் 'எம்ஜிஆர் மகன்'. கேட்டலே அதிரும்படியான டைட்டிலுடன் ஆரம்பமான இந்தப் படத்தில், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். 

சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அந்தோணிதாசன் இசையமைக்கிறார். பிரபல பின்னணி பாடகரான அவர், எம்ஜிஆர் மகன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


தேனி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'எம்ஜிஆர் மகன்' ஷுட்டிங், அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 

அத்துடன், 2020 பொங்கலுக்கு 'எம்ஜிஆர் மகன்' ரிலீஸ் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு அதிர வைத்துள்ளது. ஏற்கெனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்', அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் 'சுமோ', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' ஆகிய படங்கள் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்தப் படங்களுடன் பொங்கல் ரேஸில் எம்ஜிஆர் மகனும் இணைந்திருப்பது திரையுலகினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட தயாராகும் சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாம். 

தர்பாருடன் போட்டிப்போடும் முடிவுடன் சுமோவை பொங்கலுக்கு களமிறக்குவதில் வேல்ஸ் நிறுவனமும் உறுதியாக உள்ளதாம். இவ்விரு படங்களை ஒப்பிடுகையில் மற்ற இரு படங்களும் சின்ன படங்கள் என்பதால், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் ஒரு சில படங்கள் ரிலீசிலிருந்து பின்வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.