எம்.ஆர். பிறந்தநாளை கூடுதல் சிறப்பாகும் விதத்தில், 'நாட்காலி' படத்தில் இடம்பெற்றுள்ள ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ பாடலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் இன்று கொண்டாட படுவதை முன்னிட்டு, காலை முதலே ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த பலர் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் எம்.ஆர். பிறந்தநாளை கூடுதல் சிறப்பாகும் விதத்தில், 'நாட்காலி' படத்தில் இடம்பெற்றுள்ள ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ பாடலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் துரை இயக்கத்தில், இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் 'நாற்காலி'. இந்த படத்தில், எம்.ஜி.ஆர் நடித்த ’என் அண்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ள காலத்தால் அழையாத பாடல்களில் ஒன்றான, ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.

பா.விஜய் எழுதி இருக்கும் இந்த பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி பாடியுள்ளார். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என துவங்கும் பாடல் இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ‘நாற்காலி’ படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அதனை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்று கொண்டார். 

இயக்குனர் அமீர் முக்கியவேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார்.வித்யாசாகர் இசையில், உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் பெருமளவு முடிந்துவிட்ட நிலையில்... விரைவில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.