meyaatha maan priya share the sad news
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி, பின் சின்னத்திரை சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடித்தார். இவர் நடித்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கவே... இவருக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.

ஏற்கனவே சீரியல் வாய்ப்பு கிடைத்ததால் செய்திவாசிப்பாளர் வேலைக்கு முழுக்குப் போட்ட இவர், பட வாய்ப்பு கிடைத்ததால் சீரியலுக்கு முழுக்குப் போட்டு விட்டு மேயாத மான் படத்தில் நடித்தார்.
இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக, மெர்சல் என்கிற சுனாமியை தாண்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததால்... இந்தப் படத்தில் நடித்த இவருக்கும் , தங்கை கதாபாத்திரத்தில் நடித்த இந்துஜாவிற்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது அடுத்ததாக கார்த்தி நடிக்கும் புதிய படித்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள இவருக்கு ஒரு சோதனை வந்துள்ளது. அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பிரியா. சமீபகாலமாக நடிகர் நடிகைகள் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு வருவது போல் இவருடைய ட்விட்டர் கணக்கையும் ஹேக் செய்துள்ளனராம். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பிரியா.
