ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது உள்ளக்குமுறலைக்கொட்டிவிட்டு ஒதுங்கிச்சென்ற சுசி கணேசனை லீனா மணிமேகலை அவ்வளவு லேசில் விடுவதாயில்லை. தொடர்ந்து முகநூல் பக்கத்தில் அவரைச் சீண்டிவந்தவர், தற்போது சுசியின் மனைவியையும் வம்புக்கு இழுக்க ஆரம்பித்திருக்கிறார்.

 

லீனாவின் இன்றைய மூன்று பதிவுகள் இவை... 

...சுசியின் மனைவி அவரை நல்லவர் என்று சொன்னால் நம்பிவிடவேண்டுமா? பாலியல் குற்றம் செய்பவர்கள் தம் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்...? சுசிகணேசனின் மனைவியின் சான்றிதழை வைத்துக்கொண்டு அவரின் குற்றங்களை எப்படி தள்ளுபடி செய்வது?

...தமிழில் கதை கவிதை எல்லாம் எழுதிட்டிருக்கிற படைப்பாளிகள், பட இயக்குநர்கள், கருத்தாளர்கள் எல்லாம் #metoo இயக்கம் வந்தபிறகு செத்து கித்து போயிட்டீங்களா? இல்ல ஓடி ஒளிஞ்சிருக்கீங்களா? உங்க மெளனத்தை பயம் என எடுத்துக்கொள்ளலாமா? 

...விகடன், தமிழ் இந்து, தினமணி போன்ற தமிழ் பத்திரிகைகள் #metoo இயக்கத்தில் எடுக்கும் நிலைப்பாடு என்ன? தேசிய அளவில் ஆங்கிலப் பத்திரிகைகள், பெண்கள் வெளிப்படையாக பேசுவதற்குரிய நம்பிக்கையான வெளியை அமைத்துக்கொடுத்ததும் அதைப் பற்றிய பரந்த விவாதங்களை முன்னெடுத்ததையும் ஒரு conviction-உடன் செய்தன. பாதிக்கப்பட்டவர்களின் குரலாக தங்களை அறிவித்துக்கொண்டு செயல்பட்டன. அமைச்சர் அக்பர் கேஸ் ஒரு உதாரணம். தமிழில் ஏனிந்த மெளனம்? குற்றவாளிகளின் பக்கம் நின்று வேடிக்கை பார்க்கிறீர்களா? எதனால் பயம்?