Mersal Teser release date
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ரசிகர்கள் பலர் 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் அட்லீயின் பிறந்த நாளான செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே தல நடித்த 'விவேகம்' படத்தின் டீசர் வெளியாகி அதிக லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், 'மெர்சலும்' இதுபோல் ஏதாவது சாதனைகள் படைக்குமா என பொறுத்திருந்து பாப்போம் .
