mersal problem vijay father open talk
விஜய்யின் தற்போதைய வெற்றிப் பயணத்திற்கு 25 வருடத்திற்கு முன்பே அடித்தளம் இட்டவர் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
தற்போது இவர் மிகப் பெரிய பிரச்சனையாய் வெடித்துள்ள, மெர்சல் படத்தின் GST வசனக்காட்சி குறித்து தன்னுடைய கருத்தை பிரபல பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களிடம் இந்த வசனத்திற்கு ஆதரவு இருக்கிறது. இப்படி ஆதரவு பெற்ற ஒரு காட்சியை நீக்கச் சொல்லுவது முற்றிலும் தவறு. இது மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், சென்சாரிடம் அனுமதி பெற்று வெளியான ஒரு திரைப்படத்தை யாராலும் விமர்சிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
