mersal movie give the happy news for fans

இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்று வேடங்களில் நடித்து பல்வேறு சர்ச்சைகளை கடந்து தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரிலீசுக்கு பின்னும் அரசியல் கட்சிகளாலும், மருத்துவர்கள் சங்கத்தினால் பல்வேறு சர்ச்சைகள் வந்தாலும். தற்போது வரை பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே பல படங்களின் சாதனைகளை முறியடித்துள்ள இந்த திரைப்படம். இந்திய அளவில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த கபாலி திரைப்படத்தின் டீசர் தான் 3 ,45,82,666 பேர் பார்த்துள்ள படமாக இருந்தது. தற்போது இதனை முறியடிக்கும் விதத்தில் மெர்சல் படத்தின் டீசரை 3,46,08,716 பேர் பார்த்துள்ளனர். இதனால் இந்திய அளவில் மேலும் ஒரு சாதனையை மெர்சல் செய்துள்ளது. இந்தத் தகவலை அடுத்து இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.