விஷால்

தமிழ் நடிகர்களில் பலர் அங்கிள்ஸ் ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர்.விஷால், சிம்பு, ஆர்யா போன்றவர்களை சொல்லலாம்.விஷால் சரத்குமார் மகள் வரலட்சுமியை காதலித்தார்.பிறகு ஏனோ அந்த காதல் பாதியிலேயே போனது.

சிம்பு

அடுத்து சிம்பு பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை நயன்தாராவிலிருந்து ஹன்சிகா வரை ட்ரை பண்ணி பார்த்து விட்டார்.தமக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம் என்று தெரிந்ததும் தற்போது இமயமலைக்கு போய் தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

திருமணம்

அடுத்து ஆர்யா இவரும் பூஜா,நயன்தாரா என்று ரூட் விட்டு பார்த்தார். பலனில்லை. அதனால் தற்போது ஒரு டிவி நிகழ்ச்சி மூலம் தனக்கு பெண் பார்க்க வந்து விட்டார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்யா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தன்னை திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் இந்த நம்பருக்கு கால் செய்யுங்கள் என்று பேசியிருந்தார். அதன்படி நிறைய பெண்களும் தொடர்பு கொண்டனர்.ஆனால் கடைசியில் பார்த்தால் பிரபல தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சி அது என்று தெரியவந்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

ஷாக்

இந்நிகழ்ச்சியின், அறிமுக விழாவில் ஒவ்வொரு பெண்களாக விதவிதமான வாகனங்களில் வந்து ஆர்யாவை ப்ரபோஸ் செய்தார்கள்.ஒவ்வொரு பெண்ணாக  அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென ஒரு இளைஞரும் அதே போல் வந்து ஷாக் கொடுத்தார்.

அவனா நீ

உடனே ஆர்யாவும் மனதில் அவனா நீ என்று நினைக்கும் அளவுக்கு போய்விட்டது. அதன்பிறகே ஒரு பெண் ஆர்யாவை ஏமாற்றுவதற்காக(ப்ரேங்) செய்த ஏற்பாடு என்று தெரிய வந்தது.இதன் பிறகே ஆர்யா நிம்மதி பெருமூச்சு விட்டார்.