மதுரையில் பிரபல திரையரங்கில் படம் திரையிடப்பட்டிருந்த போது திடீரென தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

மதுரையில் பிரபல திரையரங்கில் படம் திரையிடப்பட்டிருந்த போது திடீரென தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கணேஷ் திரையரங்கு உள்ளது. இந்த, திரையரங்கில் கென்னடி கிளப் படம் திரையிடப்பட்டிருந்த போது தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து படம் பார்த்துகொண்ட ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 இதனையடுத்து, தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் தரை தளத்தில் இருந்த பொருட்கள் அனைத்து எரிந்து நாசமாகின. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.