பழம்பெரும் மலையாள நடிகை பிரமிளா ஜோஷி, இவர் கன்னட நடிகர் சுந்தர் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட்டர். அம்மா அப்பாவை தொடந்து, இவர்களுடைய மகள் மேக்னா ராஜும் நடிப்பையே கையில் எடுத்தார்.

அறிமுகம்:

இவர் தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்' என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு தமிழில் சிறந்த படமாக அமைத்தது. அதிலும் இந்த படத்தில் வரும் அனுபுள்ள சந்தியா என்கிற பாடல் பல காதலர்களின் ரிங் டோன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து 'நந்தா நந்திதா', 'உயர்திரு 420', 'கிருஷ்ணா லீலை' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் ,மொழியில் குருவான படங்களில் நடித்திருந்தாலும், கன்னடம் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். 

காதல்:

இவர் கன்னட திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். சில காலம் காதல் இல்லை என கூறி வந்த இவர்கள்... பின் தங்களுடைய காதலை ஒப்புக்கொண்டு நட்சத்திர காதல் ஜோடிகளாக உலா வந்தனர்.

நிச்சயதார்த்தம்:

இந்நிலையில் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து மேக்னாராஜ் மற்றும் சிரஞ்சீவி சார்ஜா ஆகியோரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர்.

திருமணம்:

இவர்களுடைய திருமணம் வருகிற மே மாதம் 2 ஆம் தேதி பெங்களூருவின் நடைபெற உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளது. இருவருமே திரையுலக வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சிரஞ்சீவி சார்ஜா... கோலிவுட் ஸ்டார் ஆக்சன் கிங் அர்ஜூனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.