நடிகை மேகா ஆகாஷ் நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் தொடர்ந்து பல தமிழ் படங்களிலில் அடுக்கடுக்காக கமிட் ஆகிக்கொண்டே வருகிறார்.

இவர் முதலில் நடிக்க தொடங்கிய திரைப்படம், 'ஒரு பக்க கதை' ஆனால் அந்த படம் வெளியாவதற்குள் 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'பூமராங்' என 2 படங்களில் நடித்துவிட்டார்.

அடுத்ததாக இயக்குனர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'பேட்ட' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ரஜினியால் காப்பாற்றப்படும் இளம் ஜோடியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ் ரஜினியுடன் பங்கேற்கும் காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது.

அப்போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு என் கனவு நிறைவேறிவிட்டதாக, பதிவிட்டுள்ளார்.  இதற்கு பல ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை மேகா ஆகாஷுக்கு தெரிவித்து வருகிறார்கள்.