meha akash acting rajinikanth daugther in law character

நடிகை மேகா ஆகாஷ் நடிப்பில் இதுவரை எந்த திரைப்படமும் வெளியாகா விட்டாலும், இவர் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்க துவங்கியதுமே.. பல பட வாய்ப்புகளை கைப்பற்றினார். 

அந்த வகையில் தற்போது இவர் 'பூமராங்', 'ஒரு பக்க கதை' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல இயக்குனர்கள் இவரின் கால் ஷீட்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் 'காலா' படத்தை தொடர்ந்து இயக்குனர் 'கார்த்தி சுப்புராஜ்' இயக்க உள்ள திரைப்படத்தில் ரஜினி நடிக்க உள்ளது உறுதியாகியுள்ள நிலையில். இந்த படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.