சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வந்து கொண்டிருக்கும் மீரா மிதுன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மீரா மிதுன் இறந்து விட்டதாக, RIP என கூறி ட்விட் செய்துள்ளார். எனினும் இது, ஹாக்கர்களின் கை வரிசையா எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஒரு மாடலாக இருந்து, பின்னர், சின்னத்திரை டான்ஸ் ஷோ மற்றும் பிக்பாஸ் போட்டிகளில் பங்கேற்று பிரபலமானவர் மீரா மிதுன்.8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும்தன்னை பற்றிய பேச்சுக்கள் மீடியாக்களில் சுற்றி கொண்டே இருக்க வேண்டும் என, பிளான் பண்ணி புதுசு புதுசா பல சர்ச்சைகளை கிளப்பி விடுவார்.

அந்த வகையில் தமிழகத்தில் அரசியல் சரி இல்லை அதனால் தன்னை முதல்வராக்குகள் என பிரதமருக்கு டேக் செய்வது. விஜய், சூர்யா பற்றி பேசி... இவரின் பட வாய்ப்பு  அவர்களால் தான் பறி போனது போல் ஏற்றுக்கொள்ளவே முடியாத வகையில் பேசி சீன் போட்டார். ஆனால் கடைசியில் ரசிகர்களிடம் திட்டு தான் மிஞ்சியது.

 

 

இந்நிலையில் இவரே தன்னைக்கு தானே ஒரு... ஒரு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.  இதில் மிதுன் இறந்து விட்டதாகவும் போஸ்ட்மார்ட்டம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மீராவே இந்த பதிவை செய்தாரா அல்லது அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு யாரேனும் மர்ம நபர்கள் பதிவு செய்தார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். ஒருவேளை மீராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருந்தால் இது குறித்து அவரே விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சரி இவரின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் சிலர் தட்டிவிட்ட கமெண்ட்ஸ் இதோ...