பப்ளிசிட்டிக்காக சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் நபர்களில் முக்கிய நபராக மாறியுள்ளார் மீரா மிதுன். தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யாவை விமர்சித்து வந்த மீரா மிதுன், தற்போது ஆரம்பித்த இடமான கமல் ஹாசனிடமே திரும்பி இருக்கிறார். 

தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அதை எல்லாம் பார்த்த மீரா மிதுனுக்கு பழசு எல்லாம் நியாபகம் வந்துவிட்டது போல் தெரிகிறது. அதனால் உலக நாயகன் கமல் ஹாசனை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நீங்கள் எனக்கு கொடுத்த தீர்ப்பு தவறானது. ஒரு பெண்ணிற்கு துணை நிற்காமல், ஆண் என்பதால் நீங்க மற்றொரு ஆணிற்கு சப்போர்ட் செய்தீர்கள். இப்போது என்னுடைய ஒரு வீடியோவை எடுத்து வச்சிக்கிட்டால் என் கேரியரையே கெடுத்து விட முடியும் என கமல் ஹாசன் நினைக்கிறார். 

நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த தகுதி இல்லாதவர். நீங்க என் கேரியரை தடுக்க நினைத்தால், நான் உங்களுடைய கேரியரோடு விளையாட வேண்டி வரும். உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வேன். இந்த வருஷம் உங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது. அந்த வீடியோ என் கைக்கு வரவில்லை என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நீதிமன்றத்தில்  உத்தரவு வாங்குவேன் என சகட்டுமேனிக்கு பேசியுள்ளார். 

 

இதையும் படிங்க: உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் உடை... டைட் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை ஷிவானி....!

வழக்கம் போல் மீராவின் இந்த அதிகப்பிரசங்கி தனமான பேச்சால் கடுப்பான கமல் ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் கண்டபடி கழுவி ஊற்றியுள்ளனர். கமல் சார் கேரியரை நீ சரிக்க போறீயா? போய் வேற வேலை இருந்தால் பாரு என நக்கலாக பதிலளித்து வருகின்றனர்.