வீண் பழி போட்ட மீரா..! கடைசி வரை சொந்த மகளுக்காக கண்ணீர் விட்ட சேரன்..!

மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மீரா மற்றும் சேரனுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு விட்டது என்றே கூறலாம்.

16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புது விஷயத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த வகையில் ஒரு மாற்றத்திற்காக இரண்டு கிராமத்தினர் பங்கேற்கும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் பிக் பாஸ் போட்டியாளர்கள்.

அதற்கேற்றவாறு நாட்டாமையாக சேரன், மைனர் குஞ்சு சரவணன்,மகளாக லாஸ்லியா, ஜோஷியக்காரியாக சாக்ஷி என அனைவரும் வித்தியாசமான ரோலில் வேடம் பூண்டு நடித்தனர். அப்போது சேரனின் மகளாக நடிக்கும் மீரா தன் கையில் ஏதோ வைத்துள்ளார். அதை திருடி எடுத்து சென்றுவிட்டார் என அனைவரும்...அதாவது சாக்ஷி, அபிராமி, மீரா மற்றும் சேரன் துரத்துகின்றனர். 

அப்போது அங்கிருந்த மீராவை சற்று வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து ஓரமாக தள்ளுகிறார் சேரன். இதனால் மிகவும் கோபம் அடைந்த மீரா போட்டி முடிந்தவுடன், சேரனிடம் கேள்வி கேட்கிறார்.

அப்போது, "இது போன்ற ஒரு நபரை நான் பார்த்ததே இல்லை.... அவர் வேண்டுமென்றே என்னை வலுக்கட்டாயமாக இழுத்து தள்ளி விட்டார், நடத்தை சரியில்லை... என தொடர்ந்து அனைவரின் முன்பும் தெரிவித்து இருந்தார். இதனால் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானார் சேரன். 

மன்னிப்பு கேட்ட சேரன்

சற்று வலுக்கட்டாயமாக இழுத்து இருந்தால், மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் அதை தவறாக திணித்து பேசுவது சரியில்லை என பேசுகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் மிகவும் எமோஷன் தாங்கமுடியாமல்... ஓவென்று  பயங்கரமாக அழுகிறார் சேரன். மற்ற போட்டியாளர்கள் சேரனை சமாதானபடுத்தினர். அப்போது சேரன் தெரிவித்த ஒரே ஒரு வார்த்தை.... "என்னோட இரண்டு பெண்களின் வாழ்க்கை மிக மிக முக்கியம்"... நான் அப்படிப்பட்டவன் இல்லை... 

இந்த நிகழ்ச்சியை பார்க்கும் எத்தனையோ குடும்பத்தினர் என்னை என்னவென்று நினைப்பார்கள் ?அவர்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை பார்க்கின்றார்கள்.... ஆனால் இது ஒரு கேம் ஷோ மட்டுமே... இப்படி  ஒருத்தரைப் பற்றி தவறுதலாக திணிக்கப்படுவது.. என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை... "இந்த வீட்டில் ஒன்னு நான் இருக்கணும்.. இல்லை அந்த பெண் இருக்கட்டும்" என குறிப்பிட்டு பயங்கரமாக.. அழுத நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆவல் கிளம்பி உள்ளது.