கடைசி நிமிடத்தில் மீரா செய்த வேலை..! மிரண்டு போன சேரன்..! 

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் மீரா மிதுன் வெளியேறினார்.

கடந்த ஒரு வாரமாகவே பிக் பாஸ் வீட்டில் சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக இரண்டு கிராமத்திற்கும் இடைப்பட்ட போட்டி உள்ளிட்ட பல்வேறு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்க் விளையாடியபோது... லாஸ்லியா கையில் ஏதோ திருடி வைத்திருப்பதாக அபிராமி, மீரா, சாக்ஷி அனைவரும் லாஸ்லியாவிடம் சென்று அவர் கையை திறந்து பார்க்க முற்படுகின்றனர்.

அப்போது சேரனும் ஓடி சென்று கையை திறந்து பார்க்க முற்படுகிறார். அந்த தருணத்தில் எதாச்சையாக மீரா மிதுனின் கையை பிடித்து, சற்று ஓரமாக தள்ளுகிறார். இதனால் கோபமடைந்த மீரா மிதுன் சேரனை பற்றி பல்வேறு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

ஆனால் அது பெரிய தவறாக தெரியவில்லை... விளையாட்டாக செய்த ஒன்றுதான் என அனைவரும் எடுத்துரைக்கின்றனர். இருந்தபோதிலும் மீரா அதனை ஏற்பதாக இல்லை.

இதன் காரணமாக இந்த வாரம் மீரா மிதுனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து, பின்னர் நேற்று அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீரா மிதுன் வெளியேறும்போது சேரனிடம் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். "நீங்கள் சொன்னவாறு முதலில் என்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி விட்டீர்கள்" என தெரிவித்து விட்டு வெளியே வந்தார். பின்னர் வெளியே வந்த உடன் கமலும் மீரா தெரிவித்த இந்த விஷயத்தை சுட்டிக்காட்டிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.