என்னா ஆட்டம்... செம போதை, ஆகாதே... கெட்ட ஆட்டம் போட்ட மீரா மிதுன்... கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்...!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சிகள் பங்கேற்ற மீரா மிதுன், அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து தமிழில் அவரை புக் செய்த தயாரிப்பாளர்களும் படங்களில் இருந்து நீக்கினர். இதனால் கடுப்பான மீரா மிதுன் எனக்கு சென்னையே  வேண்டாம் என மும்பையில் செட்டில் ஆனார். அங்கிருந்து கொண்டு சும்மா இருக்காமல் பிக்பாஸ் உண்மைகளை கூறுகிறேன் என பல்வேறு வீடியோக்களை வெளியிட்டார். அவ்வப்போது படங்களில் நடித்து வருவதாக கூறி செக்ஸி போட்டோஸ்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த மீரா மிதுன், புது பிரச்னை ஒன்றை கிளப்பினார். செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக போலீசாருக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு போடுவார்கள் என இஷ்டத்து பேசினார். இதனால் கொதிப்படைந்த காவல்துறை மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் இதையெல்லாம் சட்டை செய்யாத மீரா மிதுன், எழும்பூரில் உள்ள ஓட்டலில், பாடல் ஒன்றிற்கு கெட்ட ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கிட்டதட்ட அரைநிர்வாண உடையில், தலைவிரி கோலமாக மீரா மிதுன் ஆடும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் மீரா மிதுன் பெயர சொன்னதுக்கு அப்புறம், பிரச்னை இல்லாமல் இருந்தால் நல்லா இருக்குமா?. 

இந்த வீடியோவை பார்த்த மீரா ஆர்மி, ஆஹா... ஓஹோ... பியூட்டி, வெறித்தனம், மாஸ் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்க. இன்னொரு புறம் நெட்டிசன்கள், செம போதை போல என மீரா மிதுனை பங்கமா கலாய்ச்சிருக்காங்க. இன்னும் சிலரோ ஆமா, போலீஸ் இன்னும் உன்ன கைது பண்ணலையான்னு கேட்டு இருக்காங்க. தலைவிரி கோலமா மாஸ் ஆட்டம் போட்டிருக்கிற மீராவை பார்த்து, பேய் பிடிச்சிருக்குன்னு சிலர் கிண்டல் பண்ணியிருக்காங்க.