பிக்பாஸ் போட்டியில் வனிதாவுக்கு பிறகு, சர்ச்சைக்குரிய நபராக அனைவராலும் அறியப்பட்டவர் மீரா மிதுன். இவர் தன்னை நல்ல நபர் என வெளிக்காட்டி கொண்டாலும், வெளியுலகில் சர்ச்சைக்குரிய பிரபலமாகவே பார்க்கப்படுகிறார்.

தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு பெரிய கும்பிடு போட்டு விட்டு வெளியேறிவிட்டதால் மீடியாக்களின், கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் கொடுத்து வருகிறார். 

குறிப்பாக இவர், இயக்குனரும், நடிகருமான சேரன் மீது கூறிய குற்றச்சாட்டு இவருக்கு பாதகமாக அமைத்து விட்டது. ஒரு வேலை இந்த பிரச்சனையில் சற்று சிந்தித்து செயல்பட்டிருந்தால், இவர் வெளியேற்ற படாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை கமல் ஹாசனே கூறி இருந்தார்.

இவர் கூறிய குற்றச்சாட்டை வைத்து, மீரா ஒருவருடன் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாக சென்ற நிலையில், தற்போது இவர் பப்பில் தன்னுடைய நண்பர்களுடன் நடனமாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது. 

"