பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம், கிராமத்து டாஸ்க் நடந்து முடிந்ததும், எப்போதும் ஏதாவது பிரச்னையை ஆரம்பிக்கும் மீரா, நேற்றைய தினமும்,  சேரன் முதல் நாள் சொன்ன வார்த்தையை, நியாபகம் வைத்து கொண்டு, புதிய பிரச்சனை ஒன்றை செய்தார்.

கிராமத்து டாஸ்க் நடந்து கொண்டிருந்த போது, லாஸ்லியா எதையோ திருடி விட்டார் என அவரது கையில், என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள மீரா, சாக்ஷி, ரேஷ்மா, உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் அவரை துரத்தினார்கள்.

அவர்களுடன் சேர்ந்து சேரனும் லாஸ்லியாவை துரத்தி பிடித்தார். மேலும் லாஸ்லியா கையில் என்ன வைத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள, அவர் அருகில் நின்று கொண்டிருந்த மீராவின் இடுப்பை இழுத்து தள்ளி விட்டார். 

இந்த சம்பவத்தை மனதில் வைத்து கொண்டு, டாஸ்க் முடிந்த பின், அனைவர் மத்தியிலும் கூறி இதை ஒரு பெரிய பிரச்சனையாக மாற்றுகிறார் மீரா. மற்றவர்கள் அவரவர் கருத்தை கூறிய போதும் மீரா தன்னுடைய கருத்தில் விடாப்பிடியாக இருந்தார்.

மீரா பிக் பாஸ் வீட்டின் உள்ளே முதல் நாள் வந்த போது, சேரனை ஹக் செய்ய ஆசையாக சென்றார்.  ஆனால் சேரன் மீராவை தவிர்ப்பது போல் பேசி அசிங்கப்படுத்தினார்.

எனவே அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து, அன்று அப்படி பேசிய சேரன் இன்று ஏன், இப்படி நடந்து கொள்ள வேண்டும் என கூறினார். மேலும் அவர் தன்னை அப்படி தூக்கி தள்ளி விட்டது, வலியை ஏற்படுத்தியதாகவும், முரட்டு தனமாக நடந்து கொண்டதாகவும் கூறுகிறார்.  இந்த சம்பவத்தை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்கள் கூறிய போதிலும், தன்னுடைய மனதில் பட்டத்தை நான் பேசுகிறேன் என உறுதியாக இருந்தார். இவருடைய செயல் சிலருக்கு கோபத்தை வரவைத்தாலும், அவருடைய தரப்பில் இருந்து யோசித்தால் நியாயமாகவே உள்ளது என்பதே பலரது கருத்தாக உள்ளது.