பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும், பல்வேறு சமூக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் நடிகையும், மாடலுமான மீரா மிதுன், முதல் முறையாக தன்னிடம் இருந்து 'சவுத் இந்தியா 2016 ' பட்டம் பறிக்கப்பட்டதா என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மிஸ் சவுத் இந்தியா பட்டம் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டு சனம் ஷெட்டிக்கு, கொடுத்து விட்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி. அது தன்னிடம் தான் உள்ளது.

குறிப்பாக ஒருவருக்கு கொடுத்த பட்டத்தை திடீர் என அப்படியெல்லாம் பறித்து விட முடியாது. அதற்கு முன் தனக்கு நோட்டீஸ் வர வேண்டும். அதிலும் பறிக்கப்படுவதாக இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, வெற்றியாளரிடம் இருந்து பறிக்க வேண்டும் ஆனால் நான் 'மிஸ் சவுத் இந்தியா 2106 ' பட்டம் பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிறது. 

இது போன்ற வதந்திகள் பரவியது உண்மை தான். ஆனால் அதற்கு பின் 'மிஸ் சவுத் இந்தியாவாக' நான் இரண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். மேலும் இதற்கான சான்றிதழ், ஆதாரம் என்னிடம் தான் உள்ளது என கூறியுள்ளார்.