இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராத போட்டியாளர் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். இவருடைய ரசிகர்கள், கடைசி வரை மீராவை சீக்ரட் அறையில் தான் வைப்பார்கள் என எதிர்பார்த்த போதும், அது நடக்காமல் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மீரா தற்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க துவங்கியுள்ளார். அதன் படி இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் இவரிடம், இவர் வெளியேற காரணமாக இருந்த சண்டை குறித்து கேட்டபோது, இவர் மிகவும் ஆதங்கத்துடன் பகிர்துகொண்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்ததே, தன்னை வேலை செய்யாத பெண், மதிக்காத பெண், என்று தான் பாவித்து காட்டினார் சேரன். ஆனால் நான் எனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை மிகவும் விரைவாக முடித்து விடுவேன் என கூறினார்.

இந்நிலையில் இவர் கொடுத்த பேட்டியில், சேரன் என்னை மிகவும் வலிமையாக இழுத்து தள்ளியதை உணர்தேன். உண்மையில் யார் என்னை பிடித்து தள்ளினார்கள் என்று கூட தெரியாது. நான் இந்த விஷயத்தை சொன்ன போது, அவர் அதனை வேறு விதமாக எடுத்து கொண்டு, தன் மீது உள்ள தவறை மறைப்பதற்காக சீனையே மாற்றிவிட்டார்.

ஒரு வேலை மீரா இந்த பிரச்னையை செய்யாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக மீரா வெளியேற்றப்படாமல் இருந்திருக்கலாம். அதே போல் சேரன் அடுத்த வாரத்தில், ஒன்று நான் இருக்க வேண்டும் பிக்பாஸ் வீட்டில் அல்லது மீரா இருக்க வேண்டும் என கூறினார். அவரின் ஆசையை போலவே இந்த வாரம் மீரா வெளியேறிவிட்டார்.