பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்பட்டுவிட்டாரே இனி பிக் பாஸ் வீட்டில் சத்தமே இருக்காதே... ஓவர் டோஸ் இருக்ககே என ஆடியன்ஸுக்கு மட்டுமல்ல சக போட்டியாளர்களுக்கே வருத்தம் தான். ஆனால், வனிதாவை விட தான் பெரிய சண்டைக்காரி நாங்க இறக்கியிருக்கோம் என பிக்பாஸ் தரப்பில் இன்று வெளியிட்டுள்ள புரோமோவில் தெளிவாக கூறியுள்ளனர். ஆமாம் யார் அந்த தரலோக்கள்? வேறு யாருமில்லை புளுகு மூட்டை மீராவே தான். ஷாக் ஆயிடாதீங்க... ஷாக் ஆயிடாதீங்க...   இத நாங்க சொல்லல அவங்களே தான் சொல்லி சரவணன் மற்றும் சாண்டியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

வனிதா ரேஞ்சுக்கு செம்ம மாஸா யாரும் சண்டை போட மாட்டார்கள் என்பது தெரியும் ஆனால், நானும் பச்சையாக பேசுவேன் என வனிதா வெளியேறிய அடுத்த நிமிஷமே புளுகு மூட்டை மீரா பிக் பாஸுக்கு கண்டெண்ட் பிடித்துக் கொடுத்துவிட்டார்.

சரி மேட்டருக்கு வருவோம்... பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கிக் சிலரை டார்கெட் பண்ணி சண்டை போட்டு வந்தார் வனிதா. வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பின், அவர் குறித்து ஹவுஸ் மேட்ஸ்கள்  சிலரும் வனிதா வீட்டை விட்டு வெளியேறியதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டனர். அந்த வகையில் நேற்று கவின், சாண்டி, சரவணன், மீரா நேற்று வெளியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கவின், வனிதா சென்றதால் இனி சண்டை போடா ஆளே இல்லை என்று கூறினார். அதற்கு மீரா, அதான் நான் இருக்கேனே சண்டை போட என்று கூறினார். 

அதற்கு கவின், நீ அவங்க அளவிற்கு எல்லாம் பேச்சு குடுக்க மாட்ட, 10 வார்த்த பேசிட்டு நீ போய்டுவா. ஆனா, வனிதா அக்கா மத்தவங்கல தான்  ஓட விடுவாங்க என்றார். அதற்கு மீராவோ, நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். இனி யாராக இருந்தாலும் நாக்கை பிடிங்கிக்கர மாதரி பச்சை பச்சையாக கேட்பேன்...  நான் இனி வயசு வித்தியாசம் கூட பார்க்க மாட்டேன்... ஒரு எல்லை தாண்டி போச்சு என்றால் நான் வாயை திறந்தாள் அவ்வளவு தான்... என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார் மீரா.  அதன் பின் மீரா பேசியதை கண்டு ஷாக் ஆகிப்போன சரவணன், மற்றும் மாஸ்டர் சாண்டி மிகவும் பிரமித்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர். மேலும், சாண்டி மற்றும் கவின் இருவரும் நாம் இனி மற்றும் கொளுத்தி போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும் போல என்று கிண்டலடித்தனர்.

ஏற்கனவே மீரா மிதுன் தர்ஷன் மீது பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்து ரசிகர்களின் கோபத்திற்கு உலகியுள்ளார். அதே போல தற்போதுள்ள போட்டியாளர்களின் மீரா மிதுன் தான் தற்போதுள்ள மேட்ஸ்களின் வெறுப்பை சம்மதித்துள்ளார். இதனால் இந்த வாரம் இவர் நாமினேஷனில் இடம்பெறுவது மட்டும் உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

அதான் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதால் இனி கன்டென்ட்டுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என நெட்டிசன்கள் வேதனை அடைந்த சமயத்தில், புளுகுமூட்டை மீரா களத்தில் நின்று கண்டெண்ட் கொடுப்பார் எனது தெரிகிறது.