மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு கடைசியாக வந்ததால் என்னவோ, இன்னும் யாருடனும் அவர் சரியாக செட் ஆகாமலேயே உள்ளார். முதலில் மதுவுடன் குரூப்பில் இருந்த இவர், தற்போது வனிதாவின் குரூப்பின் சேர்ந்து கொண்டு மதுவை டார்கெட் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது, புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இதுவரை மீரா சண்டை போடாமல் இருந்த போட்டியாளர்களின் ஒருவரான லாஸ்லியாவிடமும் சண்டை போட்டுள்ளார். 

கமல் கூறிய எவிக்சனின்போது லாஸ்லியா, மீராவின் பெயரை டிக் செய்தார். அதனால் கோபம் அடைந்த மீரா, லாஸ்லியாவிடம், 'நீ என் பெயரை டிக் செய்தது ரொம்பவே அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய நெருங்கிய தோழியே எனக்கு எதிராக வேலை செய்தது போல் உணர்ந்தேன். ஒருவேளை நான் உன்னை தோழியாக பார்த்தது எனது தவறு என நினைக்கின்றேன்' என்று கூறி லாஸ்லியாவை வம்புக்கு இழுத்தார். 

அதற்கு லாஸ்லியா, 'எனக்கு எல்லோருமே பிரண்ட்ஸ் தான், நீங்கள் இப்படி நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் மதுமிதா பக்கம் இருந்தீங்க, அவங்ககிட்ட நீங்க சொன்ன விஷயம் எனக்கு தப்பா பட்டுச்சு', என செம கூலாக பதிலடி கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அந்த ப்ரோமோ இதோ: