Asianet News TamilAsianet News Tamil

தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா நடிகர் மயில்சாமி... பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்..!

mayilsamy create new political party
mayilsamy create new political party
Author
First Published Dec 11, 2017, 7:59 PM IST


நடிகர்களாக இருந்து அரசியலில் சாதித்தவர்கள் பலர்... இதற்கு மிகப் பெரிய உதாரணம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும். தற்போது கூட ரஜினி, கமல், விஷால் என பலர் அரசியலுக்கு வருவார்கள் என்கிற மிகபெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது.

ரஜினி, கமலை அரசியலில் ஆர்.கே.நகர் இடைதேர்தல் மூலம் மிஞ்ச நினைத்த விஷாலுக்கு, தேர்தல் அதிகாரி வேட்பு  மனுவை தள்ளுபடி செய்து விஷாலின் கனவை கலைத்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்து ஒரு சில காரசாரமான கருத்துக்களை முன்வைத்து வரும் காமெடி நடிகர் மயில்சாமி அரசியல் கட்சி ஆரம்பித்தது போல் ஒரு போஸ்டர் சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது .

இந்த போஸ்டரில், தே.ப .பா.க என்று அரசியல் கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தேசிய பணக்காரர்கள் பாதுகாப்புக் கழகம் என்பது விரிவாக்கமாம். இப்படிப் பரவி வரும் போஸ்டரால் பலர் மயில்சாமி தனிக் கட்சி ஆரம்பித்தாரா? அல்லது திரைப் படத்தின் போஸ்டரா என குழம்பி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த போஸ்டர் இதோ...

mayilsamy create new political party

Follow Us:
Download App:
  • android
  • ios