நேற்றைய தினம், பிக்பாஸ் வீட்டில் இருந்து, நடிகை ஜாங்கிரி மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால், பிக்பாஸ் வீட்டின் விதியை மீறியதற்காக வெளியேற்றப்பட்டார்.  இந்த செய்தி பிக்பாஸ் நிகழ்ச்சி கமல் என்ட்ரி கொடுக்கும் முன் அனைத்து ரசிகர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

மேடைக்கு வந்த கமல்ஹாசன் முதல் வேலையாக நடிகை மதுமிதாவை வரவேற்றார். பின் இவர் வெளிவந்தது ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவிக்கிறார்.  இதற்க்கு மது, தன்னுடைய கருத்து ஏற்கபடவில்லை என்றும், தனக்கு கேப்டன் என்கிற பொறுப்பை கையாளத் தெரியவில்லை. தான் கேப்டனாக இருந்தால் மற்றவர்கள் வெளியேறி விடுவதாக கூறியதால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார்.

மேலும் தனக்கு கடைசிவரை சேரன் மற்றும் கஸ்தூரி மட்டுமே துணை நின்றதாகவும் கூறுகிறார். ஆனால் கஸ்தூரி மற்றும் சேரன் உறுதுணையாக இருந்தும் இவர் இப்படி ஒரு முடிவை கையில் எடுத்தது, மதுவின் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல சேரன் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவருக்குமே அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக இருந்தது.

மதுவின் போராட்டம் அகிம்சை முறையில் இருந்திருக்க வேண்டும் என, தன்னுடைய கருத்தை அக்கறையோடு கூறிய கமல், அகம் வழியே பிக்பாஸ் வீட்டில் உள்ள, ஹவுஸ் மேட்சுடன் பேசலாமா என கேட்க, மதுமிதாவும் சரி என்று கூறினார். 

அனைவரும், எழுந்து நின்று கமலை வரவேற்ற பின்,  சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர பிக்பாஸ் வீட்டில் உள்ள யார் முகத்தையும் தான் பார்க்க விரும்பவில்லை என தன் மனதில் உள்ள வலியுடன் நேரடியாக கூறி அதிர வைத்தார் மது. இதற்கு சேரன் இது தவறு என அவர் எடுத்த முடிவைப் பற்றி பேசுகிறார் பின்வரும் உங்களுடைய அமைதிப் போராட்டம் நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என சேரனுக்கு வாழ்த்து தெரிவித்த மது, பிக்பாஸ் வீட்டில் வெற்றி பெற தகுதியானவர்கள் சேரன் மற்றும் கஸ்தூரி என இருவருடைய பெயரை மட்டும் கூறிவிட்டு பிக்பாஸில் இருந்து விடை பெற்றார்.