பிக்பாஸ் வீட்டில், இன்று காலையிலேயே ஜாங்கிரி மதுமிதா, தற்கொலைக்கு முயன்றதாக கூறிய போதிலும், இது குறித்து முழுமையான தகவல் வெளியாகாததால், அது வதந்தியாக இருக்குமோ என மக்கள் நினைத்தனர். ஆனால் தற்கொலை முயற்சி உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து,  மதுமிதா வெளியேற மாட்டார் என நினைத்த அவருடைய ரசிகர்களுக்கு இவர்,  திடீர் என வெளியேறி உள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே தற்கொலைக்கு முயன்றதாக சில கிசுகிசுக்கள் எழுந்தது. இதனை உறுதி செய்யும் விதத்தில், அவருடைய கையில் இருக்கும் காயமும், இவர் ஏதோ ஒரு விபரீத முடிவை கையாண்டு உள்ளார் என்பதை தெரிவிக்கும் படி உள்ளது.  

இந்நிலையில் இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் "தட்டில் வைத்து கொடுத்த வெற்றியை தட்டி விட்டு விட்டு, இங்கு வந்து நிற்பது தனக்கு ஏமாற்றமாக இருக்கிறது என கூறுகிறார். இதற்கு மது தன்னுடைய வார்த்தைகள், அது ஏற்று கொள்ளப்பட்ட விதம் அதிருப்தியை உண்டாக்கியதாக கூறுகிறார். பின்னர் கமல் உங்களுடைய தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவிக்கிறார். பின் சேரன் மது எடுத்து தவறான முடிவு என மன கஷ்டத்தோடு கூறுகிறார்.

இவர்கள் பேசியதில் இருந்து, மது கூர்மையான ஆயுதத்தை கொண்டு தன்னுடைய கையை கிழித்து, தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என யூகிக்க படுகிறது. உண்மையில் என்ன நடந்தது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல், மனதில் பட்டவற்றை தைரியமாக பேசி மக்கள் மனதை வென்ற போட்டியாளர்களில் நடிகை ஜாங்கிரி மதுமிதாவும் ஒருவர், சுமூகமாகப் போய்க் கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையை, திடீரென வந்து தூண்டி விட்டவர் வனிதா.

இவர் பிள்ளையை கிள்ளி விட்டு விட்டு தொட்டிலையும் குழந்தை அழுகாமல் இருக்க ஆட்டுவது போல், சில பிரச்சினைகளை செய்து விட்டு சைலன்ட் ஆகி விட்டார். கடைசியில் இந்த பிரச்சனையில் சிக்கியது என்னவோ மதுமிதா தான். 

இது குறித்து கேள்வி எழுப்பிய போது அமைதியாக இருந்த ஆண் போட்டியாளர்கள் மதுமிதா கேள்வி எழுப்பியதை மிகவும் கோபமாக கையாண்டார்கள்.  பிக்பாஸ் வீட்டில் உள்ள மதுமிதாவுக்கு கஸ்தூரி, சேரன், போன்ற சில ஆதரவாளர்கள் இருந்தும் தொடர்ந்து ஆண் போட்டியாளர்கள், மற்றும் இவர் எந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடினாரோ... அந்த பெண்களே ஆண் போட்டியாளர்களுடன் செய்து கொண்டு இவரை எதிர்த்தனர்.

இதனால் மனம் உடைத்து, இவர் விபரீத முடிவை எடுத்ததால் தற்போது பிக்பாஸ் குழுவினர் மதுமிதாவை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர் என்பது தெரிகிறது.