பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்ததில் இருந்து அடுக்கடுக்கான பிரச்சனைகளும், தலைவிரித்தாட துவங்கியுள்ளது. மேலும், இத்தனை நாள் கம்முனு, முகேன் பின்னாடி சுற்றி கொண்டு இருந்த அபிராமி அவருக்கு எதிராக சண்டை போட்டு, கை ஓங்கும் அளவிற்கு இந்த பிரச்சனை வளர்ந்தது.

இது ஒரு புறம் இருக்க, நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வீட்டில் உள்ள ஆண்கள், பெண்களை யூஸ் செய்ததாக அனைத்து ஆண்கள் மீதும் சீறி பாய்ந்தார் மதுமிதா. இதற்கு ஒரு தரப்பினர் சப்போர்ட் செய்தாலும், மற்றொரு தரப்பினர் இவருக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த பிரச்சனை இன்றும் வெடிக்க உள்ளது தற்போது வெளியாகியுள்ள புரோமோ மூலம் தெரிய வருகிறது. கவின் வனிதா வந்த பின்னர்தான் இப்படி பேசுறீங்க. இவ்வளவு நாள் கம்முன்னு அமைதியாத்தான இருந்தீங்க. வீட்ல இருக்குற எல்லா ஆம்பளங்களையும் பொம்பளைங்கள யூஸ் பண்ணுனாங்கன்னா, தர்ஷன் யாரை யூஸ் பண்ணினான், சேரன் யாரை யூஸ் பண்ணினாறு? என்று கார சாரமான கேள்விகளை, மதுமிதாவை பார்த்து கேட்கிறார்.

கவினை தொடர்ந்து,  லாஸ்லியாவும்  'வனிதா வந்து ஒரு வார்த்தை சொன்ன பின்னர் பொங்கி எழுந்தீட்டிங்க, இத்தனை நாள் என்ன வேற்று கிரகத்திலா இருந்தீங்க? என குரலை உயர்த்த, மதுமிதா என்ன பதில் சொல்வது என தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார். 

இன்றைய தினம், ஏதேனும் புதிய பிரச்சனை வரும் என பார்த்தால், நேற்றைய பிரச்சனை தான் இன்றும் தொடர்கிறது.