நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார கேப்டன் யார் என்பதை தேர்வு செய்வதைக்கான போட்டி ஷெரின், தர்ஷன், மற்றும் மதுமிதா ஆகிய மூவருக்கும் இடையே நடைபெற்றது. இந்த விளையாட்டில் தான் சீட்டிங் செய்து, வசமாக சிக்கியுள்ளார் மதுமிதா. 

பிக்பாஸ் வீட்டில் வைக்கப்படும் டாஸ்குகளில் சிறப்பாக விளையாடிய மூவரை தேர்வு செய்து, அவர்களுக்கு கேப்டன் பதவிக்கான போட்டிகள் வைக்கப்படுவதும். அதே போல், மிகவும் மோசமாக விளையாடியவருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படுவது வழக்கம் தான்.

அந்த வகையில், இந்த முறை பிக்பாஸ் ஹோட்டலுக்கு வருகை தந்த வனிதாவை, நன்கு கவனித்து கொண்டதாக தேர்வு செய்யப்பட்ட, மதுமிதா, ஷெரின், மற்றும் தர்ஷன் ஆகியோர்க்கு நேற்றைய தினம் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது.

இதில், கேப்டன் என ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை அவரவருக்கு கொடுக்கப்பட்ட நிற எழுத்துக்களில் சேர்த்து வைக்க வேண்டும். இதில் மதுமிதா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதனால் சாண்டிக்கு பின், தலைவர் பதவியை மதுமிதா கைப்பற்ற உள்ளார்.

இந்நிலையில், மதுமிதா நேர்மையாக இந்த டாஸ்கை விளையாடாமல், தில்லு முல்லு செய்து தான் இந்த பதவியை கைப்பற்றியுள்ளதாக கூறி, இது குறித்த ஒரு வீடியோவையும் பதிவு செய்துள்ளனர் ரசிகர்கள்.

அதாவது இந்த வீடியோவில், கண் கட்டப்பட்டுள்ள மதுவிற்கு எப்படி தர்ஷன் கையில் வைத்துள்ளது மது பொறுத்த வேண்டிய எழுத்து என்பது தெரியும். அது தெரிந்ததால் தான், தர்ஷன் கையில் உள்ளதை வாங்க, அவரை தள்ளி விட்டு விட்டு இவர் பிடிங்கி கொண்டு போய் உரிய எழுத்தை பலகையில் பொருந்துகிறார் என வீடியோ ஆதாரத்தோடு தங்களுடைய சந்தேகத்தை முன் வைத்துள்ளனர் ரசிகர்கள். 

மேலும் மது சீட்டிங் செய்து தான் இந்த கேப்டன் பதவியை கை பற்றியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.