'பத்தல பத்தல' பாடல் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஸ்வரூபம் 2-வை தொடர்ந்து நான்கு வருடம் கழித்துதற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் உருவாகியுள்ளது. கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 


மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த பாடலில் மத்திய அரசு குறித்த விமர்சனங்கள் மற்றும் மதம் சார்ந்த குறிப்புகளை நீக்க வேண்டும் என்று புகார் எழுந்தது.

அதோடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் வெளியிடப்பட்ட ட்ரைலரில் ஆபாச வசனம் ஒன்று இடம்பெற்றிருப்பதாகவும் இந்த காட்சி நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. போதாக்குறைக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் வேறு அதே வசனத்தை பயன்படுத்தி போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பியிருந்தனர். மூத்த நாயகனும் அரசியல் தலைவருமான கமல் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது சரியில்லை என பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்ச்சையை கிளப்பிய பத்தல பத்தல பாடல் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Scroll to load tweet…