Mathubala acting karthika mother character

நடிகை மதுபாலா , தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர் என்கிற, பெருமைக்குரிய மணிரத்தினம் இயக்கிய 'ரோஜா' படத்தில், அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அறிமுகம் கொடுத்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, அர்ஜுன், பிரபுதேவா, போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

திருமணம் ஆகி செட்டில் ஆனதும், திரைத்துறையில் இருந்து விலகி இருந்த இவர், மீண்டும் தமிழில் 'வாயை மூடி பேசவும்' என்கிற படத்தின் மூலம், நஸ்ரியாவிற்கு அம்மாவாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து மதுபாலாவிற்கு அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்ததால், தற்போது சீரியலில் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராதாவின் மகன் நடிப்பதற்காக கூறப்படும் சீரியலில், அவருக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம் மதுபாலா. வரலாற்று படைப்பாக உருவாக்கப்படும் இந்த சீரியலில் மதுபாலாவின் கதாபாத்திரம் பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த "சிவகாமி தேவி" கதாபாத்திரத்திற்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.