mathavan leave Aishwarya rai movie

தமிழில் 'இறுதிசுற்று' ,இந்தியில் 'சாலா கடூஸ்' திரைப்படத்தின் மூலம் ஒரே நேரத்தில் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகர் மாதவன். தற்போது இரண்டு மொழி படங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இயக்குனர் அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் 'பேனி கான்' என்னும் படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அனில்கபூருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூரவ தகவல் வெளியாகியது.

ஆனால் தற்போது தீடீர் என இந்த படத்தில் இருந்து தான் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார் மாதவன். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், 'பேனி கான்' படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததால் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒற்றுக்கொண்டேன். ஆனால் தற்போது கால் சீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேனி கான் திரைப்படம் வெற்றிபெற தன்னுடைய வாழ்த்துக்களையும் கூறினார் . அதே போல் மாதவன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது இவருக்கு பதிலாக நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர்.