வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட தற்போது சின்னத்திரையில் தோன்றும் போட்டியாளர்களுக்கும்  தொகுப்பாளர்களுக்கும் கூட ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். 

இந்த நாவீன உலகத்தில் யார் எப்போது பிரபலமாவார் என்றே தெரிவதில்லை? இப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன் சிறு காதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை பிரியா வாரியார் ஒரே நாளில் உலகத்தில் உள்ள அனைவரையும் தன்னுடைய புருவ அசைவிற்கு ரசிகர்களாக மாற்றினார்.

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி:

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமத்து மண் வாசனை மாறாமல் பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.  ராஜலட்சுமி மற்றும் இவருடைய கணவர்.

நாட்டுபுற பாடல்களை அழகாக அமுத குரலில் பாடி தமிழுக்கும், கலைகளுக்கும் பெரும் சேர்த்து வரும் இவர் கைத்தறி நெசவாளர் குடும்ப பின்னணியிலிருந்து வந்ததை எடுத்து சொன்னார்.

மாதவனின் பாராட்டு:

ஏற்கனவே இவர் கர்ப்பிணியாக இருந்த போது விவசாயிகளுக்காகவும், ஹைரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடியதற்கு பலர் மத்தியில் பாராட்டுக் குவிந்த நிலையில் இப்போது இவர் நெசவாளர் குடும்பத்தில் இருந்து வந்ததை கேட்டும், அவருடைய திறமையை பாராட்டி...  எளிமை, அற்புதம், பெருமையாக இருக்கிறது. இது தான் தமிழ்நாடு. அப்படியான உலகத்தை தான் பார்க்க விரும்புகிறேன் என மாதவன் கூறியுள்ளார்.