லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ஏற்கனவே சொன்னது போலவே இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் நிறைவு பெறும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார், அதே போல செய்தும் காட்டிவிட்டார். அதுமட்டுமல்லாது சொன்னபடி ஏப்ரல் 9ம் தேதி படம் ரிலீசாகும் என்றும் உறுதியான தகவல்கள் வெளிவந்தன.

மாஸ்டர் படத்தின் அப்டேட்டில் ரசிகர்கள் எதிர்பார்த்தது இரண்டே விஷயம் ஒன்று இசை வெளியீட்டு விழா எப்போது, அதில் எங்க தளபதி சொல்லுற குட்டி ஸ்டோரிய நாங்க எப்போ கேட்கப்போறோங்கிறது. அடுத்தது ஷூட்டிங்கின் போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி விஜய் கன்னத்தில் முத்தம் கொடுத்ததாகவும், அந்த புகைப்படம் விரைவில் வெளியாகும் என்பது தான். 

இந்த இரண்டாவது மேட்டருக்காக தளபதி ப்ளஸ் மக்கள் செல்வன் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருந்தனர். இந்நிலையில் தளபதி விஜய்க்கு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கொடுத்த அன்பு முத்த புகைப்படத்தை படக்குழு சரியான நேரத்தில் வெளியிட்டு, அதகளப் படுத்தி உள்ளது. மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட்டுக்கான தேதி வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இப்படியொரு இன்பதிர்ச்சியை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்களுக்கு சனிக்கிழமை இரவு பார்ட்டியாக கிடைத்த இந்த புகைப்படம் தாறுமாறு வைரலாகி வருகிறது.