இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் அல்லது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனிடையே விநியோகஸ்தர் சிங்காரவேலன் உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று செய்திகள் வெளியிடுகின்றனர். ஆனால் படக்குழுவினருக்கு நான் ஒரு தாழ்மையான விண்ணப்பம் வைக்கிறேன். தயவுசெய்து எப்படியாவது மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். தியேட்டர் உரிமையாளர்களுக்கும், நமக்கும் இருக்கிற சிறிய பிரச்சினைகள் அண்ணன் தம்பிக்குள் இருக்கும் பிரச்சினை போன்றவை. எளிதில் சரியாகி விடும், ஆனால் நம்மை நம்பி தொழில் செய்து வரும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இந்த சமயத்தை விட்டால் ஒரு வருடம் பின்னோக்கி சென்றது போல் ஆகிவிடும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “பாண்டியர் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகைக்கு திடீர் உடல் நலக்குறைவு... ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை...!
"எனவே ரசிகர்களுடன் நானும் சேர்ந்து மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்க்க தான் விரும்புகிறேன், தயவுசெய்து இதை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுங்கள். மாஸ்டர் படம் என்று தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதோ அன்றுதான் ஒரு பெரிய எழுச்சி கிடைக்கும். மக்கள் தியேட்டரில் சென்று படம் பார்க்க இருக்கும் பயம் நீங்கும். விஜய் போன்ற சூப்பர் ஸ்டாரின் படங்கள் தான் அதற்கு ஒரே வழி. தியேட்டர்கள் இயங்கி எட்டு மாதம் ஆகிவிட்டது. மிகப்பெரிய வருவாய் இழப்பை குறைக்க மாஸ்டர் மிகப் பெரிய உதவியாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 28, 2020, 6:47 PM IST