கொரோனாவால் கனவாக மாறிய 'மாஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ...! ஆதங்கத்தில் தளபதி ரசிகர்கள்!

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், தளபதியின் ரசிகர்கள் பலம் பற்றி சொல்லவே வேண்டாம். அவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது, அதனை திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள்.
 

master movie first day first show vijay fans dreamed spoiled

தளபதி விஜய்:

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், தளபதியின் ரசிகர்கள் பலம் பற்றி சொல்லவே வேண்டாம். அவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது, அதனை திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள்.

மாஸ்டர் திரைப்படம்:

கடைசியாக தளபதி விஜய் நடிப்பில், அட்லீ இயக்கிய 'பிகில்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

master movie first day first show vijay fans dreamed spoiled

எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாஸ்டர்:

மாநகரம், கைதி என இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,  விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்திருப்பதும் இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு ஒரு   காரணம்.

ஸ்டைலிஷ் வாத்தி:master movie first day first show vijay fans dreamed spoiled

இந்த படத்தில், கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக... நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவி தீனா, கௌரி கிஷன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு... அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான அணைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஏமாற்றம்:

master movie first day first show vijay fans dreamed spoiled

'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி, அதாவது இன்று வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்கவேண்டும் என்கிற ரசிகர்களின் ஆசை கனவாக மாறியுள்ளது. இந்த ஆதங்கத்தை #MasterFDFS என்கிற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கி தீர்த்து வருகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios