அப்படி வீட்டிற்குள் இருக்கும் மாளவிகா மோனன், வெள்ளை நிற உடையில் மல்லாக்கப் படுத்துக் கொண்ட எடுத்துள்ள செல்ஃபி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகுமா? என விஜய் ரசிகர்கள் செம்ம டென்ஷனில் இருக்கிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் செம்ம கிளாமர் லுக்கில் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மாஸ்டர் பட அப்டேட்டுகளை எல்லாம் பின்னுத்தள்ளிவிடும் போல தெரிகிறது. 

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 


இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ வேகத்தில் பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன.பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும் படி அறிவுறுத்தியுள்ளன. ஹாலிவுட் பிரபலங்கள் வரை சாமானியர்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

அப்படி வீட்டிற்குள் இருக்கும் மாளவிகா மோனன், வெள்ளை நிற உடையில் மல்லாக்கப் படுத்துக் கொண்ட எடுத்துள்ள செல்ஃபி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்களை டைம் பாஸ் செய்ய மாளவிகா மோனன் போட்ட செல்ஃபி போட்டோ இதோ...