master barath turn to hero
வெள்ளித்திரையில் இதுவரை 40திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் மாஸ்டர் பரத்.
தமிழில், விஜய், கமல், தனுஷ் என பல முன்னணி நடிகர்கள் படங்களில், நடித்தது மட்டும் இன்றி தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்துவதற்காக சில காலம், சினிமா துறையில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டு, மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த உள்ளதை உறுதி செய்துள்ளது நடிகர் அல்லு சிரிஷ் வெளியிட்டுள்ள தகவல்.
அடுத்ததாக அல்லு சிரிஷ் நடிக்கும் ஒரு படத்தில், இவர் கூடவே இருக்கும் இரண்டாவது ஹீரோ போன்ற முக்கிய கதாப்பாத்திரத்தில், நடிக்க கமிட் ஆகியுள்ளாராம் மாஸ்டர் பரத்.
இந்த தகவலை தெரிவித்ததோடு பரத்தின் தற்போதைய புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார் அல்லு சிரிஷ். இந்த புகைப்படத்தில் ‘போக்கிரி’ படத்தில் நடிகை அசினின் தம்பியாக நடித்த அந்த குண்டு பையன் பரத்தா இது..? என அனைவரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு மாறியுள்ளார் பரத்.
