நடிகர் ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்குப்பின் தற்போது ஹீரோவாக நடித்து முடித்துள்ள திரைப்படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். இந்தப்படத்தை அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சரண் இயக்கியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தில் நடிகை ராதிகா ஆரவிக்கு அம்மாவாக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். காமெடி, ஆக்ஷன், காதல் என அனைத்தும் கலந்த படமாக இப்படம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் அதிகார பூர்வமாகஅறிவித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும் காவியா தாப்பர், மற்றும் நிகிஷா பட்டேல் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஏற்கனவே நடிகர் ஆரவ், விஜய் ஆண்டனி நடித்த சைத்தான், படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். அதே போல் ஓகே கண்மணி படத்திலும் ஒரு சிறிய ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.